Blog Archive

Tuesday, August 26, 2008

முஸ்லிம் பெண்களின் பிரச்சனைகள்

நம் நாட்டில் பெண்களின் பிரச்சனைகள் அத்தனையும் திருமணத்தை மையமிட்டதாகவே உள்ளன.

திருமணம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகிய அனைத்திலும் பெண்ணடிமை பிணைந்து கிடக்கின்றது.

இவை அனைத்தும் சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தப்பட்டு சாதிகளின் வழியாகப் பாதுகாக்கப்படுகின்றன. என்று ஒரு பெண்ணியவாதி தன்னுடைய கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார்.

கருக்கலைப்பு, சிசுக்கொலை, மீறிப் பிறந்தால் வரவேற்பின்றி புறக்கணிப்பு, குழந்தை வளர்ப்பில் பராபட்சம், விளையாட்டுகளில் கூட வேறுபாடு, கல்வி அளிப்பதில் பாகுபாடு என்றிவ்வாறாக சீர், செனத்தி, நகை, நட்டு, வரதட்சணை, தற்கொலை, புகுந்த வீட்டுக் கொடுமைகள் என்ற தொடர்கதையாக நீள்பவை அனைத்தையும் பார்க்கும் போது மேற்கூறப்பட்ட கருத்து உண்மையே என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

கூடக்குறைவு ஏதுமின்றி பெண்களின் மீதான இக்கொடுமைகள் யாவற்றையும்

மனித வாலாற்றில் இஸ்லாம் மட்டும்தான் ஒழித்துக்கட்டி

பெண்ணினம் தன்னுடைய வாழ்வு மூச்சை சீராகச் சுவாசிக்க வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது

என்று நாம் முன்வைக்கிற அதே சமயம்,

தற்போதைய நிகழ்கால முஸ்லிம் சமூகத்தில் இக்கொடுமைகள் நிலவவே இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கவும் தயாராக இல்லை!

ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் (கி.பி.எட்டாம் நூற்றாண்டில்) இந்தியாவில் இஸ்லாம் அறிமுகமானது என வைத்துக் கொண்டால் கூட

ஏறக்குறைய பன்னிரண்டு நூற்றாண்டு காலமாய் இங்கே இஸ்லாமும், முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொல்லவேண்டும்.

ஆனால், முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்றுதான் சொல்ல முடியுமேயொழிய இஸ்லாம் வாழ்ந்து வருகின்றது என்று சொல்லவே முடியாது.

பிரச்சனையின் அடிப்படைச் சிக்கலே இங்குதான் அவிழ்கின்றது.

ஷஓரிறைவனை மட்டுமே ஒப்புக்கொண்டு

அவன் காட்டிய வழியில் தான் வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வேண்டும்

என்கிற சத்திய நன்னெறியினை இந்தியவாழ் முஸ்லிம்கள் தத்தமது சமகாலத்தைய சகோதர சமயத்தார்களிடம் முறையாகக் கொண்டுபோய் சேர்த்தார்கள் இல்லையா?

என்கிற கேள்வியையே இங்கு நாம் ஒதுக்கித் தள்ளிவிடுவோம்.

கடவுட் கொள்கையிலும், பண்பாட்டிலும் பாரதூரமான வேறுபாடுகளைக் கொண்ட இருசமூகங்கள் அருகருகே கலந்து வசிக்கும்போது அவற்றிற்கிடையே பரஸ்பரம் நிகழும் தாக்கங்கள் எங்ஙனம் அமையும்?

அடிப்படைக் கொள்கையையோ, அவற்றின் கூறுகளையோ ஏற்றல்,

கலாச்சாரத்தின் சிற்சில அம்சங்களை ஒப்புக் கொள்ளல்,

நேரிடையாகவோ, எதிரிடையாகவே ஒருசில பண்பாட்டு மாற்றங்கள், சிதைவுகளுக்கு உட்படுதல் போன்ற தளங்களில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன?

இத்தகைய எதிர்த் தாக்கங்கள் எந்தச் சமூகத்தில் அதிகமாகப் பிரதிபலித்தன?

எனும் கோணத்தில் ஆராயப் புகுந்தோமென்றால்

இந்திய முஸ்லிம்; பெண்கள் இன்றைக்கு சந்தித்து வருகின்ற எல்லாப் பிரச்சனைகள், அவலங்களுக்குமான முழுவிடை கிடைத்துவிடும்.

இஸ்லாமிய இறைக்கோட்பாடு இந்திய சமய நெறிகள், சித்தாந்தங்கள் பலவற்றிலும் பெருத்த மாறுதல்களை ஏற்படுத்தியது.

இஸ்லாமியப் பேரறிஞர் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி இதுகுறித்து எழுதியுள்ள ஒரு கருத்து மேலோட்டமாகப் பார்க்கையில் அதிர்ச்சியை அளித்தாலும் ஆழக் கவனித்தால் உண்மை புலனாகும்.

அவர் எழுதுகிறார்: இஸ்லாமின் ஓரிறைக் கோட்பாடு காரணமாக சித்தாந்த மாறுபாட்டை சந்தித்தவை ஆர்ய சமாஜம், ஜனசங்கம், ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகளே ஆகும்.

விளைவாக, உருவ வழிபாடு எனும் இணைவைப்புக் கருத்திலிருந்து (தவ்ஹீது எனும்) ஓரிறைக் கோட்பாட்டை நோக்கி நெருங்கிவர அவை முயன்றன.

நாம் பெண்ணியம் பற்றி பேசிக் கொண்டிருப்பதால் பண்பாட்டுத் தளத்தை கவனிப்போம்.

தன்னுடைய பண்பாட்டின் சிறப்புக் கூறுகள் பலவற்றை இஸ்லாம் பிறசமய நெறிகள், மரபு சித்தாந்தங்கள் போன்;றவற்றிற்கு ஷஏற்றுமதி செய்திருந்தாலும்,

குறிப்பிட்டுக் கூறுமளவுக்கு வீரியமிக்க பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களை ஷஇறக்குமதி செய்து உள்வாங்கி கொண்டது.

(உலமாக்கள், மார்க்க அறிஞர்களின் கவனமும் கண்காணிப்பும் இல்லாமல் போனதால் தான் இது நிகழ்ந்தது என்று தைரியமாகக் கூறலாம்).

உருவ வழிபாட்டிற்கு இணையான தர்கா வழிபாடு,

ஆதீனமடாதிபதிகள், தனிநபர் வழிபாடு,

செய்வினை, ஜாதிகளுக்கு மாற்றாக உட்பிரிவுகள் பிராதரி (சகோதர இனப்பிரிவுகள்)

சூனியம் போன்றவற்றின் மாற்றாக ஆமில்கள்,

தங்கல்களின் அமைப்பு,

பஞ்சாங்கத்திற்குப் பதிலாதஃபால் கிதாபுகள்,

ஜோஸியம், ஜாதகம் போன்றவற்றை அப்படியே மனமொப்பி ஏற்றுக் கொள்ளும் தன்மை,

குலதெய்வங்கள் போன்று குல தர்காக்கள், நேர்ச்சை, நேர்ச்சை யாரை நோக்கி செய்யப்படுகின்றதோ அவர் பெயரையே குழந்தைகளுக்கு வைக்கும்போக்கு,

குடும்ப உறுப்பினர்கள் (ஆண்பெண் உட்பட) அனைவர் பெயரிலும் அக்குல தர்கா அவ்லியாவின் பெயர் இடம் பெறுதல்,

சிற்சில இடங்களில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே பெயரையே சூட்டும் குணம்,

திருமணம், திருமண சடங்குகள், மூன்று நாள் முதல் ஏழு நாட்கள் வரை நடைபெறும் திருமண வைபவங்கள்,

சீர் செட்டுகள், நகை வரதட்சணைகள், மொய் வகையறாக்கள், அழைப்பு ஊர்வலங்கள், திருமணங்களைத் தொடர்ந்து படையெடுத்து வரும் பண்டிகை, விழா சீரியல்கள், வளைகாப்பு, குழந்தை பிறப்பு சீர்கள், கருக்கலைப்பு,

(பெண்சிசுக் கொலை மட்டும் நானறிந்து அவ்வளவாக இல்லை)

பெண் குழந்தை புறக்கணிக்கப்படுதல், வளர்ப்பில் பாகுபாடு பாரபட்சம், கல்வி மறுப்பு,

பத்தாம்பசலித்தனத்தின் அடையாளமாய் பெண் உருவாக்கம் என்று முஸ்லிம் சமூகத்தில் இன்று பிடிவாதமாய் நின்று நிலவிவரும்

இவை எதுவொன்றுமே இஸ்லாத்தின் அம்சங்கள் அல்ல.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஷஒட்டி உறவாடி வரும் மாற்றுமதத்தாரின் பண்பாட்டைப் பார்த்து கற்றுக் கொண்டவை

அல்லது சிலைவணக்கம் தவறு என்றுணர்ந்து நம் முன்னோர் இஸ்லாமிய ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு உள்ளே வந்தபோதும் விடாப்பிடியாக அக்கறையின்றி கொண்டு வந்த மிச்ச சொச்சங்கள் இவை.

மக்களுடைய மனப்போக்கு என்று இதை ஒதுக்கித் தள்ள முடியாது.

ஆலிம்கள் உலமாக்களின் பொறுப்பின்மை, கவனக்குறை என்று தான் கூறவேண்டும்.

இறைத்தூதர் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பின்பற்றியவர்களே எங்களுக்கும் ஒரு சிலையைச் செய்து கொடு! என்று கேட்டிருக்கும் போது

மக்கள் என்றால் அப்படி இப்படித்தான் இருப்பார்கள் என்று காரணம் கட்ட முடியாது.

(உலமாக்கள் ஏன் கவனம் செலுத்தாது விட்டுவிட்டனர் என்பது வேறொரு தலைப்பின் கீழ் விவாதிக்க வேண்டிய விஷயம்!)

இஸ்லாம் முறையாக போதிக்கப்படவில்லை, பின்பற்றப்படவில்லை என்பது தான் கருத்தூன்றி இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்!

இதன் விளைவு எப்படி வெளிப்பட்டாக வேண்டுமோ அப்படியே வெளிப்படுகின்றது.

ஷகுரலற்றவர்களின் குரல் என்கிற தலைப்பில் தேசிய பெண்கள் ஆணையம் வெளியிட்ட நூலொன்று சிறையில் இருந்தபோது என்கைக்கு வந்தது.

அந்நூலை தொடர்ச்சியாக வாசிக்கவே என்னால் இயலவில்லை.

கண்ணீர் ததும்பித் ததும்பி எழுத்துக்களை மறைத்துக் கொண்டே இருந்தது.

அடிகள் உதைகளுடனான வளர்ப்பு, குடிகாரத் தந்தையின் கொடுமை, பாலியல் சீண்டல்கள்,

முதிர்கன்னிகள், வரதட்சணை சித்ரவதைகள், கணவனின் கொடுமைகள்,

தலாக் பயமுறுத்தல்கள், நிர்க்கதியான நிலை,

போக்கிடமோ, புகலிடமோ ஏதுமற்ற அநாதரவு!

ஐயா, இவையெல்லாம் என்ன?

உலகமெல்லாம் சமத்துவம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் இஸ்லாமின் சொந்த வீட்டில்தானா இவையனைத்தும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன?

யா அல்லாஹ்! இவற்றுக்கெல்லாம் யார் காரணம்?

இஸ்லாமிய அமைப்பொன்றின் முன்பு ஊழியம் செய்து கொண்டிருந்த போது முஸ்லிம் பெண்கள் படும் பாட்டினை கண்களால் பார்த்திருக்கிறேன்.

நெருங்கிய உற்றார் உறவினர்களினால் நிகழ்த்தப்படும்; பாலியல் சீண்டல்களைப் பற்றி காது கொடுத்துக் கேட்டிருக்கிறேன்.

அவற்றால் மனம் பாதிக்கப்பட்ட பெண்களை பேதைச் சகோதரிகளைக் கண்டுள்ளேன்.

முறையற்ற தலாக்குகளால் சீரழிந்து போனோர்

தொலைந்து போன வாழ்வைத் தேடி அலைவதையும் கண்டுள்ளேன்.

இளம் வயதில் துணையற்றுப் போன (பெரும்பாலோர் தலாக் விடப்பட்டவர்கள்)

முஸ்லிம் பெண்களின் மறுவாழ்வுக்கென்றே திருப்பூர், குன்னூர் போன்ற இடங்களில் அமைப்புகள் இயங்குகின்றன.

தென்காசி பகுதியில் பழங்குடி முஸ்லிம் பெண்களை முறைப்படி திருமணம் செய்து கொடுப்பதெற்கென்றே சிலர் பாடுபட்டு வருகிறனர்.

இவர்கள் அனைவரும் தாங்கள் மேற்கொண்டுள்ள பணியை நிறைவேற்ற எப்படியெல்லாம் திணறுகிறார்கள் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா?

எழுத்துகளிலும், பயான்களிலும் முன்வைக்கப்படுகின்ற இஸ்லாம்தான் மொஹல்லாக்களிலும் வசிக்கின்றது என்றால் இவர்களுக்கு எல்லாம் எதற்கு இந்த வேலை?

இதற்கெல்லாம் யாருகண்ணா காரணம்?

இறைவனா?

இறைத்தூதரா?

வான்மறை குர்ஆனா?

வழிகாட்ட வந்த நபிமொழியா?

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்!

இவைதாம் காரணம் என்றால் இப்படிப்பட்ட மார்க்கம் கண்டிப்பாக இறைமார்க்கமாக இருக்காது.

இத்தகைய போதனைகளுக்குப் பின்னணியில் உள்ள ந}ல் கட்டாயம் இறைமறையாக இருக்காது.

இஸ்லாமிய அறிவு கொடுக்கப்படாததும், இஸ்லாமிய வாழ்வும் ஒழுக்கமும் பயிற்றுவிக்கப் படாததும் தான் உண்மையான காரணங்கள் என்கிற ஒருமித்த முடிவிற்குத்தான் நீங்களும் நானும் இப்போது வரவேண்டியிருக்கிறது.

கற்பிப்பதும், பயிற்றுவிப்பதும் யார்மீது கடமை?

அக்கடமையை ஏன் அவர்கள் நிறைவேற்றாமல் போனார்கள்?

என்பனவெல்லாம் பக்கவாட்டில் முளைக்கின்ற துணைக்கேள்விகள்!

ஆனால் ஒன்றை மட்டும் நீங்களும் நானும் கண்டிப்பாக செய்யமாட்டோம்.

இஸ்லாத்தின் கோட்பாடுகளை கேள்விக்குள்ளாக்குவது,

ஷரீஅத்தை சுட்டிக்காட்டி குற்றஞ்சுமத்தவது,

குர்ஆனுக்கு புதியதொரு விளக்கம் காணவேண்டும் என்று துடிப்பது,

பெண்கள் சட்டவாரியம் அமைப்பது,

வெகுஜன ஊடகங்களில் இஸ்லாத்தை விமர்சிப்பது என்பன போன்ற செயல்கள் நம்மிடமிருந்து தோன்ற.மேற்கண்ட அவலங்களையெல்லாம் எவ்வாறு அகற்றுவது?

அதற்குரிய வழிமுறைகள் என்ன? என்பது பற்றியும் நாம் விரிவாக அலசி ஆராய வேண்டியுள்ளது.

சொல்லப் போனால் இஸ்லாமிய சமூக மறுமலர்ச்சியின் கட்டுமானமே அதன் மீது தான் அமையவேண்டியிருக்கும்.

அதுபோலவே ஷபெண்ணுக்கான முழு முற்று விடுதலை – பரிபூரண விடுதலை இஸ்லாமின் மூலம் தான் சாத்தியம் என்பதை இக்கட்டுரையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வலியுறுத்தி உள்ளேன்

பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் கூட இவ்விஷயத்தில் பெரிதாக ஒன்றும் சாதித்திட இயலாது என்றும் கூறுகிறோம்.

அதெப்படி இஸ்லாம் மட்டும் வெற்றியை ஈட்டும் அல்லது ஈட்டியது என்பதைக் காணலாம்.

பரிசுத்தமான எண்ணம்

இஃக்வாஸ் எந்தச் செயலை செய்வதற்காக இருப்பினும் அதற்கென்று ஒரு சில நிபந்தனைகள் உண்டு.

அந்நிபந்தனைகள் முழுமை செய்யப்பட்டால்தான் அச்செயல்கள் நிறைவடையும். நாம் இறைவனை வழிபடுகின்றோம்.

நம்முடைய வழிபாடுகள்இ இபாதத்துகள் இறைவனால் ஏற்கப்படவேண்டுமென்றால் அவற்றில் இஃக்ளாஸ் இருக்க வேண்டும்.

இஃக்ளாஸ் என்றால் என்ன?

இஃக்ளாஸ் என்றால் 'கலப்பற்ற பொருள். நூற்றுக்கு நூறு தூய்மையான பரிசுத்தமான பொருளின் தன்மையைக் குறிக்கவே இஃக்ளாஸ் என்ற சொல் பயன்படுகின்றது.
கால்நடைகளிலிருந்து தூய்மையான பாலை அல்லாஹ் நமக்கு வழங்குகிறான். அப்பாலை குறிப்பிட ஃகாலிஸா என்ற பதத்தை அல்லாஹ் பயன்படுத்தியுள்ளான். (16˜66)

மலக்குடலுக்கும் இரத்தநாளங்களுக்கும் இடையிலிருந்து 'தூய்மையான பால் அதில் மலத்தின் நாற்றமும் இல்லை; இரத்தநிறமும் இல்லை; .
எனவே முழுமையான நிறைவுப் பண்புகளைக் கொண்ட கலப்பற்ற ஒன்றைக் குறிக்க 'இஃக்ளாஸ் என்ற சொல் பயன்படுகின்றது.

ஒரு மனிதர் அண்ணலாரிடம் வந்தார்.

வந்தவர் '(மறுமையில்) கூலியையும் (இவ்வுலகில்) புகழையும் எதிர் பார்த்துப் போரிடும் மனிதனைப் பற்றி தங்களுடைய கருத்து என்ன?' என்று கேட்டார்.

'அவனுக்கு ஒன்றுமே கிடைக்காது' - என்றார்கள் அண்ணலார்கள்.

மீண்டும் மீண்டும் மூன்று தடவை அதையே அவர் கேட்டார்.

ஒவ்வொரு முறையும் அதே பதிலையே அண்ணலார் அளித்தார்கள்.

பிறகு விளக்கினார்கள். 'தனக்காக மட்டுமே செய்யப்படும் அமலையும் தன்னுடைய திருமுகத்தை மனதிற்கொண்டு செய்யப்பட்ட செயலையும் மட்டுமே அல்லாஹ் ஒப்புக் கொள்வான்!'

அறிவிப்பவர்- அபுஉமாபா (ரலி) பதிவு- அபுதாவூது நஸாயி.

தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கியவர்களாக அவனுக்கு மட்டுமே இஃக்ளாஸான எண்ணத்துடன் அவனை வழிபட ஆணையிடும் இறைவசனங்கள் வான்மறை குர்ஆனில் பலப்பல உள்ளன.

'நீர் அல்லாஹ்வையே வழிபடும்! தீனை கீழ்படிதலை அவனுக்கே உரித்தாக்கிய நிலையில்' (39:2)

'தீனை - கீழ்படிதலை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கி அவனை வணங்கும் படி எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது'. (39:11)

'நான் என்னுடைய தீனை - கீழ்படிதலை அல்லாஹ்வுக்கு முற்றிலும் உரித்தாக்கிய வண்‹ம் அவனையே வணங்குவேன் (39:14)

நாங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே எங்கள் அடிபணிதலை முற்றிலும் உரித்தானதாக்கி விட்டோம்'. (2˜139)


முஆதிப்னு ஜமல் யமன் தேசத்து ஆளுநராகப் பொறுப்பேற்கப் புறப்பட்ட போது அண்ணலாரிடம் வந்து உபதேசிக்குமாறு வேண்டி நின்றார்.

அண்ணலார் கூறினார்கள். 'உன்னைுடைய தீனை இஃக்ளாஸாக ஆக்கிக் கொள். நீ செய்யும் குறைவான அமல்களே உனக்குப் போதுமானதாகும்! -

தர்கீப் வத்தர்ஹீப் அல்ஹாகிம்-

நம்முடைய விரோதியான ஷைத்தானிடமிருந்து நாம் பாதுகாப்பு பெற வேண்டுமென்றால் நாம் இஃக்ளாஸோடு இருக்க வேண்டும்

முஃமின்களில்களை ஷைத்தானால் அணுகவோ சீர்கெடுக்கவோ வழிகெடுக்கவோ இயலாது.

வான்மறையில் இதை அவனே ஒப்புக் கெள்ளும் வசனம் பதிந்துள்ளது.

'அதற்கு அவன் கூறினான். 'என் இறைவனே! நீ என்னை வழிபிறழச் செய்தது போன்று நானும் உலகில் அவர்களுக்குக் கவர்ச்சிகளை ஏற்படுத்தி அவர்கள் அனைவரையும் வழிபிறழச் செ்யவேன்.

ஆனால் 'உன்னுடைய தூய இறைநம்பிக்கை கொண்ட அடியார்களைத் தவிர!' (15:39 40).

ஷைத்தானின் தோழர்களான தாகூத்திய சக்திகளும் காஃபிர்களும் இஃக்ளாஸோடு இறைவனை மடுமே மனதில் நிறுத்தி முனைப்புடன் நாம் செயல்படுவதை ஒருபோதும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.
வகைவகையான துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

ஆக முஃக்ளிஸ்களாக வாழ நினைப்பவர்கள் தாகூத்திய சக்திகளை எதிர்கொண்டே ஆக வேண்டும்.

அதற்காக தயாராக்கிக் கொள்ளவேண்டும்.

'உங்கள் தீனை அல்லாஹ்வுக்கே உரித்தாக்கிய வண்ணம் அவனையே அழையுங்கள்!

உங்களுடைய இந்த செயல் இறைநிராகரிப்பாளர்களுக்கு எவ்வளவு வெறுப்பூட்டக்கூடியதால் இருந்தாலும் சரியே!'

Tuesday, August 19, 2008

பெண்ணியம்: சில புரிதல்கள்

பெண்ணியம் தொடர்பான சில அடிப்படை விஷயங்களை சகோதரர்கள் புரிந்து கொண்டால் நலம் என்று நினைக்கிறேன்.
பிரச்சனையின் முழுப் பரிணாமத்தை விளங்கிக் கொள்வதற்கு அவை துணைபுரியும்.
ஏனென்றால், யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் அதைப் பற்றி அடிப்படையான அறிவு இருக்கின்றதோ இல்லையோ பேசலாம் என்பது இப்போதெல்லாம் ஒரு புதிய மரபாக ஆகி வருகின்றது.
பெண்ணியம் என்றால் என்ன? என்பது பற்றி அனைத்து வாசகர்களும் நன்கு விளங்கி வைத்திருப்பார்கள் என்று நான் கருதவில்லை.
ஆதி காலந்தொட்டே பெண்ணினம் ஏதோ ஒரு வகையான அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டே வந்துள்ளது.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மனித வரலாற்றைப் பார்த்தோமென்றால் எப்போதெல்லாம் சத்திய நன்னெறி பின் தள்ளப்பட்டு அசத்தியக் கோட்டுபாடுகள் தலையெடுத்தனவோ அப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா சமூக அவலங்களும் அரங்கேறியுள்ளன.
அவற்றுள் முன் வரிசையில் பெண் அடக்குமுறை இடம்பிடிக்கின்றது.
இறைத்தூதர்கள் வழியாக இடையிடையே இஸ்லாமிய நன்னெறி புத்துயிர் பெற்ற போதெல்லாம் பெண்ணுக்கு அவளுடைய இயல்பான உரிமை வழங்கப்பட்டு வந்துள்ளது.
வரலாற்றில் ஆணித்தரமாக பதிவாகியுள்ள செய்திகளின் அடிப்படையில் பார்த்தோமென்றால் பத்தொன்பதாம் நூற்;றாண்டில் பெண்ணியக் கொள்கை தலையெடுத்தது.
பெண் விடுதலைக்கான வாசல் திறந்தது, என்பதை படிக்கலாம்.
ஆனால், உண்மை நிகழ்வுகளை அலசிப் பார்த்தோமென்றால் பெண்ணுக்கான உண்மையான சுதந்திரம் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இஸ்லமின் மூலமாகத்தான் கிடைத்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த ஊரை, தான் பேசும் மொழியை, தான் பின்பற்றும் சமய நெறியை விரும்பி நேசிக்கத் தான் செய்கிறார்கள்.
எல்லை கடந்துபோய் சிலரிடம் இது வெறியாக மாறிவிடுவதும் உண்டு.

அத்தகைய ஒரு சமயப்பற்றினால் நாம் இவ்வாதத்தை முன் வைக்கவில்லை.

மனிதகுலத்திற்கான விடுதலையே இஸ்லாமின் மூலமாகத்தான் சாத்தியம் என்று நாம் கூறுகிறோம்.
வரலாற்று அரங்கில் குறைந்த கால கட்டம் தான் என்றாலும் அதைப் பரீட்சித்துக் காட்டி இருக்கிறோம்.
மனித குல விடுதலையே இஸ்லாமின் மூலமாகத் தான் என்னும் போது பெண் இனமும் கண்டிப்பாக அதில் அடங்கத்தானே செய்யும்.சமவுரிமை, சமத்துவம் என்றெல்லாம் பேசும் இன்றைய பெண்ணிய சிந்தனை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறப்பெடுத்தது.
கற்பனைச் சமூகவியலாளரான சார்லஸ் ப்;யூரியே என்பவர் தாம் முதலில் பெண்ணியம் என்னும் சொல்லை 1837 இல் கையாண்டார்.
அதன்பின்பு அது தொடர்ந்து வளர்ச்சியடைந்து கொண்டே சென்று இன்று விமர்சனங்களின் விளிம்பில் வந்து நிற்கின்றது.
ஓரிடத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன, நசுக்கப்படுகின்றன என்றால் அவற்றைப் பெறவும் மீட்டெடுக்கவும் அங்கே பாதிப்படைந்தவர்களால் கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கருத்து மோதல் கள் கிளம்புகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன.

எந்தெந்தக் காரணங்களால் இவ்வுரிமைகள் பறிக்கப்பட்டனவோ அவற்றைக் குறி வைத்தே இவ்வெதிர்வினைச் செயற்பாடுகள் அமைக்கின்றன.

இக்கண்ணோட்டத்தில் பெண்ணியம் பேசும் உலகளாவிய குழுக்களை கீழ்க்காணும் ஏழெட்டுப் பிரிவுகளில் வகைப்படுத்தலாம்.
அப்பிரிவுகளின் தலைப்புகளே பின்னணிக் காரணங்களை விளக்கிவிடும் என்பதால் வகைப்படுத்துவதோடு நாம் நின்று கொள்கிறோம்.

சமஉரிமை, சமத்துவம் கோரும் குழுக்கள்

தாயார் சமூக அமைப்புக் குழுக்கள்

ஆணாதிக்க எதிர்ப்புக் குழுக்கள்

பிரிவினைவாதக் குழுக்கள்

நிலம் சார்ந்த குழுக்கள்

மேற்குலகு தாண்டிய குழுக்கள்

பாலியல் சுதந்திரம் பேசும் குழுக்கள்

நம்முடைய இறை நம்பிக்கையும் ஈமானும் சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த இடத்தில் இத்தகைய பின்னணிக் காரணங்கள் இஸ்லாமிய சமூக அமைப்பினுள் நிலவுகின்றனவா?
என்று கேட்பதைவிட இத்தகைய பின்னணிக் காரணங்கள் இடம்பெற இஸ்லாமியக் கோட்பாடு அனுமதிக்கின்றதா? என்று கேட்பதற்கே முன்னுரிமை அளிப்போம்.

இவ்விரண்டு கேள்விகளுக்கும் இடையிலான அடிப்படை அதே சமயம் அதிமுக்கிய வேறுபாட்டை விளங்கிக் கொண்டால் இன்றைக்கு ஒரு சிலர் இஸ்லாமியப் பெண்ணியம் என்று அறிவுக்குச் சம்பந்தமே இல்லாமல் மனதில் தோன்றியதையெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சூழல் தோன்றியிருக்காது.

ஏனென்றால் யூதப் பெண்ணியம், கறுப்புப் பெண்ணியம், பிரெஞ்சுப் பெண்ணியம், ஆப்பிரிக்கப் பெண்ணியம், கிறிஸ்துவப் பெண்ணியம், இந்து மதப்பெண்ணியம் என்றெல்லாம் நிலம் சார்ந்த, இனம்; சார்ந்த, சமயம் சார்ந்த பெண்ணியக் குழுக்கள் காணப்படுவதைப் போல இஸ்லாமியப் பெண்ணியம்; என்று உலக அரங்கில் காணப்படுவதில்லை

(அதைத்தோற்றுவிக்க ஒரு சிலர் வலுக்கட்டாயமாக முயற்சிக்கிறார்கள்)

ஏன்? என்ன காரணம்? என்றால் எந்த விதமான உட்காரணங்களும் அறவே இல்லை என்பதால் இஸ்லாமியப் பெண்ணியம் தோன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் அடியோடு கிடையாது.

ஒரு கொள்கையோ. கோட்பாடோ பெண்ணை மனுஷியாகக் கருத மறுத்தால், அவளை அடக்கி வைக்கவும் அடிமைப்படுத்தவும் நினைத்தால், அவளிடம் புதைந்துள்ள திறமைகளை வெளிக்கொணர விடாமல் தடுத்தால் நாம் அதை உட்காரணம் என்று கூறுகிறோம்.

ஒரு கொள்கையைப் பின்பற்றும் மக்கள், பின்பற்றாளர்கள் அதனை முறையாக பின்பற்றாததால் தோன்றும் பின் விளைவுகளை நாம் புறக்காரணம் என்று வகைப்படுத்துகிறோம்.

இஸ்லாமிய வட்டத்திற்குள் பெண் விடுதலை என்கிற பேச்சே எழ வாய்ப்பில்லை. ஏனெனில் அதற்கான உட்காரணம் ஒன்று கூட இங்கு காணப்படவில்லை என்று நாம் கூறுவதால் இஸ்லாமியப் பெண்கள் அனைவரும் சமூக அளவிலும், கல்வி, பொருளாதாரத்திலும் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடையப் பெற்று மேனிலையில் விளங்குகிறார்கள் என்று சாதிப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது.
நம்முடைய பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் உள்ளார்கள் என்பதையோ, அதற்கான மூல காரணங்களை இனங்கண்டறிந்து நீக்குவதில் முனைந்து செயற்பட வேண்டும் என்பதையோ நாம் ஒரு போதும் மறுக்கவில்லை.
உட்காரணம், புறக்காரணம் என்பவை பற்றிய முறையான புரிதல் எதுவும் இல்லாமல்,
ஆழ்ந்து சிந்திக்கும் திறன், சீர்தூக்கிப்பார்க்கும் போக்கு எதுவுமே இல்லாமல், மேற்கண்ட எல்லாவகையான பெண்ணியக் கொள்கைகளுக்கும் அமைந்துள்ளதைப் போன்றே, முஸ்லிம் பெண்களின் கீழ் நிலைக்கும் இஸ்லாமிய சமயத்தில் உள்ள குறைபாடுகளும் கோளாறுகளும் தான் காரணம் என்று வெள்ளாடுகளைப் போல மேலோட்டமாகப் புரிந்துகொண்டும்,

அதிமேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டும் சிலர் எக்கச்சக்கமாக பேசி கொண்டுள்ளார்கள்.

இத்தகைய வெள்ளாடுகளை கறுப்பு ஆடுகளாக எப்படியாவது மாற்றி இஸ்லாமின் மீது சேற்றையும் சகதியையும் வாரியிறைத்துவிட வேண்டும் என்று உலகளாவிய அளவில் சில சக்திகள் தொடர் முயற்சிகளில் ஈடுபடுகின்றன.
இறையருளால் இத்தகு முயற்சிகள் அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவதில்லை என்பதோடு, உட்காரணம் எதுவும் உண்மையிலேயே இல்லாததால் அவை தோல்வியையே தழுவும்.இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனித்துப் பார்க்க வேண்டும்.

கட்டுரைக்கு இடையில் சம்பந்தமில்லாமல் வந்து விட்ட விஷயம் என்றாலும் கவனித்தாக வேண்டிய விஷயம்.

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற நான் இறைவனுக்குப் பயந்து நான் அறிந்த சில விஷயங்களை சகோதரர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் நாளை அதற்கான விசாரணையை சந்திக்க வேண்டியிருக்கும் என்கிற பயத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இறைவனைப் பற்றிய பயம் என்னை எழுதத் தூண்டுகின்றது.
இறைநம்பிக்கை, இறையருள் என்கிற சொற்களைப் பயன்படுத்துகிறேன்.
அதே சமயம், இஸ்லாமியப் பெண்ணியம் என்று பேசுபவர்களுடைய, முஸ்லிம் பெண்களைப் பார்த்து பரிதாபப்பட்டு எழுத்தாணியை ஏந்துபவர்களை உன்னிப்பாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால் இத்தகைய ஒரு பார்வையையே காண முடியாது.

ஒரே இறைவன்தான் என்பது நம் கொள்கை.
ஒரே இறைவன் தான் என்பதால் அவனால் படைக்கப்பட்ட அனைத்து மக்களும் சரிசமமானவர்கள்.
வெள்ளை கறுப்பு பாகுபாடுகள், நிற வேறுபாடுகள், ஆண் பெண் பிரிவினைகள் அறவே கிடையாது.
ஆணை விட பெண் தாழ்ந்தவள் அல்ல என்று நாம் கூறுகிறோமென்றால் அதற்கான அடிப்படை அம்சம் இங்குதான் இருக்கின்றது.
மேலுலகில் இருந்து கருத்துக்களைத் தருவித்துக்கொண்டிருக்கும் இறக்குமதியாளர்கள் (இறங்குமதியாளர்கள்) இந்த இடத்தில் வேறுபடுகிறார்கள்.
பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் அதற்காக முனைந்து உழைப்பதும் தான் பெண்ணியம் என்றால் இன்றைய முஸ்லிம் பெண்களின் நிலை என்ன?
சமூக அளவிலும், குடும்ப அளவிலும், கல்வி பொருளாதார நிலைகளிலும் அவர்கள் எங்ஙனம் காணப்படுகிறார்கள்?
என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
இன்ஷா அல்லாஹ் அவற்றை பின்னால் காண்போம்.
அதேசமயம் பெண்களின் உரிமைகளாக பெண்ணியக் குழுக்கள் முன்வைக்கும் சமஉரிமை,
ஆண்களுக்கு நிகரான வேலைவாய்ப்புகள்,
தனித்துவம்,
பாலியல் சுதந்திரம்,
ஓரினச் சேர்க்கை போன்றவற்றைப் பற்றி இஸ்லாம் என்ன கருதுகின்றது என்பதையும் நாம் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

இஸ்லாமிய சமூகம் என்பது இறைத்தூதர் முஹம்மது (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் இறைவனின் பேரருள் அவர் மீது உண்டாகட்டும்) அவர்களுடைய வார்த்தைகளில் ஓர் உடலை போன்றது.
உடலில் ஒரு நோய் தோன்றிவிட்டால் அதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறி மழுப்புவது அறிவுடைமை ஆகாது.
நோய் நாடி நோய் முதல் நாடி கண்டடைந்து நீக்க முயல வேண்டும்.

முஸ்லிம் பெண்கள் இன்று எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது நம் உள்ளம் பதறுகின்றது.
இறைவனிடம் அவர்களுக்காக மன்றாடுகிறோம்.
தலாக், வரதட்சணை, அடக்குமுறை, பாலியல் துன்புறுத்தல்கள், சிறைக் கொடுமைகள் போன்று எத்தனை எத்தனையோ தளைகளை அவர்கள் தங்கள் கழுத்துக்களில் சுமந்து கொண்டுள்ளார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்க்க வீறு கொண்டு நாம் போராடுவோம்.
பெண்ணியம் என்கிற பேனரின் கீழ் அல்ல.
நம் இனப் பெண்கள் இன்னலூறுகிறார்களே என்கிற அக்கறையினாலும் அல்ல!
இறைவனும் இறைத்தூதரும் கடமையாக்கியுள்ள காரணத்தினால்! நாளை விசாரணை நாளன்று வல்ல இறைவனுக்கு முன்னால் குற்றவாளிகளாய் நிற்க வேண்டியிருக்குமே என்கிற பயத்தினால்!!

Tuesday, August 5, 2008

இஹ்திஸாப் சுயபரிசோதனை

த˜ஜ்கியா விற்கான முதல் நிலை அமைப்பு இஹ்திஸாப் ஆகும்.

இஹ்திஸாப் என்றால் சுய பரிசோதனை என்று பொருள்

அதாவது தன்னைத் தானே. தன்னுடைய அமல்களைத் தானே - சோதித்துக் கொள்வது ஆகும்!.


வான்மறையில் வல்ல இறைவன் கூறுகிறான்˜
'இறைநம்பிக்கை! கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மேலும் நாளைய தினத்திற்காக எதனைத் - தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு மனிதனும் (எண்ணிப்) பார்க்கட்டும்!' (59˜18)


'நாளைக்காக எவ்வெவ்வற்றை சேகரித்துக் கொண்டுள்ளீர்கள் என்று கணக்கெடுக்கும்படி அல்லாஹ் இவ்வசனத்தில் அறிவுறுத்துகிறான்.
என்று கூறுவார்கள்.

அதாவது - 'நீங்கள் விசாரிக்கப்படும் முன்னால் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்!'


இஹ்திஸாப் - ஒரு முஃமினுடைய தவிர்க்க இயலாத பண்பாகும்.

இஸ்லாமிய இயக்கம் தங்கள் உறுப்பினர்களிடையே இம்முறையை தீவிரமாகப் பின் பற்றியும் வலியுறுத்தியும் வருகின்றது.

அண்ணாரின் இயக்கந்தொட்டு இன்றுள்ள இயக்கங்கள் வரையிலும் இம்முறை பின்பற்றப்படுவதை நம்மால் காணமுடிகின்றது.


இஹ்திஸாப் இரண்டு வகைப்படும்.


1. தனி நபர் பரிசோதனை


2. கூட்டுப் பரிசோதனை


இவ்விரண்டையும் தனித்தனியாக அறிவோம்.


(1). தனிநபர் சுய பரிசோதனை

மனிதன் தன் அன்றாட வாழ்வில் காலை முதல் இரவு - வரை எத்தனையோ காரியங்களைச் செய்கின்றான்.

இறைவனுக்குப் பிடிக்காத இறைவனின் வெறுப்புக்கு ஆளாக்குகின்ற பலப்பல காரியங்களையும் அவன் செய்து விடுகின்றான்.

எப்படி அவற்றைக் களைவது? அவற்றிலிருந்து விலகி இருப்பது எப்படி?


தின்ந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை - காலை சுபஹ் தொழுகைக்கு முன்போ அல்லது இஷாவுக்குப் பின்பு படுக்கையில் அமர்ந்து தூங்கும் முன்போ - ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.


தூக்கத்தின் முந்தைய நேரம் சிறப்பானதாகும்.

தூங்கும் முன படுக்கையில் உட்கார்ந்த நிலையில் அன்றைக்கு காலையில் தூங்கி விடிந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை நாம் செய்த எல்லா செயல்களையும் மனதில் பட்டியலிட்டு சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்!

இன்றைக்கு காலையில் சுபுஹுக்கு சரியான நேரத்தில் எழுந்தோமா? சுபுஹ் தொழுகையை ஜமா அத்தோடு நிறைவேற்றினோமா? என்று ஆரம்பித்து ஒவ்வொன்றாக ஒன்றன்பின் ஒன்றாக பட்டியலிட்டுக் கொண்டே வரவேண்டும்.

நம்முடைய ஒரு நாளின் அனைத்து செயல்களும் நம் கண்முன்னே வந்தபின் அவற்றை முழுமையாக சீர்தூக்கிப் பார்த்தால் அவற்றில் உள்ள நிறைகுறைகள் நமக்குத் தென்படும்.

நம்முடைய சிறுசிறு தவறுகள் குறைகள் நம் பார்வையில் படும்.

நாம் நம்முடைய பெற்றோர்களின் பேச்சை மதியாது இருந்திருப்போம்!

அவர்களை உதாசீனப்படுத்தியிருப்போர்;

மனையாளை தேவையில்லாமல் கடிந்துரைத்திருப்போம்;

தேவையில்லாமல் பக்கத்துவீட்டுக் காரரிடம் சண்டை பிடித்திருப்போம்;

யாரையவாது தேவையில்லாமல் திட்டி இருப்போம்;

கோபப்பட்டிருப்போம்..............

அது போன்றே இஸ்லாமியர் என்பதை நிரூபிக்க யாரிடமாவது இஸ்லாமியக்கொள்கை கருத்துகளைத் தெரிவிக்க சந்தர்ப்பம் வாய்த்தும் அதனைத் தவற விட்டிருப்போம்...........

அல்லது யாராவது ஒருவர் நம்மிடம் இஸ்லாம் பற்றி சந்தேகங்கேட்கையில் தெளிவாக விளக்க இயலாது தடுமாறியிருப்போம்................


இப்படியாக இவை அனைத்தும நம்முடைய கவனத்துக்கு வரும் போது ஒரு நாள் வாழ்க்கையின் மேடுபள்ளங்கள் அமல்களில் ஏற்பட்டிருந்த ஏற்ற இறக்கங்கள் யாவும் ஒரே பார்வையில் நேர்க்கோட்டில் வந்து நின்று விடும்.

எதை நாம் சீர்திருத்த வேண்டும்?

நம்மிடம் உள்ள எந்தெந்த தீய பண்புகளைக் குறைக்கவேண்டும்? என்பதையெல்லாம் நாம்அறிந்து கொள்ளலாம்;

நம்மிடம் முன்கோபம் உள்ளது;

நம்மிடம் அலட்சிய மனப்பான்மை உள்ளது;

அமல்களை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதைத் தடுக்கும் அசட்டைப் போக்கு உள்ளது;

பொறுப்பற்ற தன்மை உள்ளது எனப்பல சிறுசிறு குறைகள் தென்படும்.


இன்ஷா அல்லாஹ் இவற்றையெல்லாம் நான் எனது நாளைய வாழ்வில் தவிர்த்துக் கொள்வேன் என்று வைராக்கியம் பூண்டு கொள்கிறோம்

மறுநாளிலேயே இவை அனைத்தையும் நம்மால் களைய இயலாது;

ஆனால் ஆரோக்கியமான முன்னேற்றம் கண்டிப்பாக ஏற்படும்.

இவ்வாறு சில நாட்களில் பெரும்பாலான தவறுகள் நம்மை விட்டு நீங்கிவிடுவதை நாம் அனுபவ பூர்வமாக உணரலாம்.

அமல்கள் நாளுக்கு நாள் பொலிவடைவதையும் நம்மால் பார்க்க இயலும்.


(2) கூட்டு இஹ்திஸாப்

தனிநபர் இஹ்திஸாப் மூலமாக பெரும்பாலான நம்முடைய குற்றங்குறைகளை தப்புத் தவறுகளை களைய முடியும் என்றாலும் அது குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுமே செயற்படும்.


அவ்வெல்லையைத் தாண்டி அதனால் செயற்பட இயலாது போகும்.

சில பல தவறுகளை சீர்படுத்துவதில் அது உதவிகரமாய் இராது.

உதாரணமாக நாம் சில செயல்களை 'தவறு என்றே கருத மாட்டோம்;

அவை நல்லவை என்று நினைத்தே செய்து வருவோம்.

நாமே அவற்றை நன்று என்று கருதுவதால் நம்முடைய 'தவறுகள் பட்டியலில் அவை இடம் பெறாது.


ஆனால் உண்மையில் அவை தவறான செயல்களாகவே இருக்கும்.

இப்பேற்பட்ட செயல்களைச் சீர்திருத்துவதில் தனிநபர் இஹ்திஸாப் பயனுள்ளதாக இராது.

அவ்வாறே சில தவறான செயல்களுக்கு நாம் சிறு வயதிலிருந்தே அடிமையாக ஆகி இருப்போம்


அதாவது தொடர்ந்து செய்து வருவதன் காரணமாக நம்மீதான அதன் தாக்கம் வீரியமுள்ளதாக மாறிப் போயிருக்கும்.

இவ்வகைத் தவறுகளை களையெடுப்பதிலும் சுய இஹ்திஸாப் பெரும்பங்கினை எதுவும் ஆற்ற இயலாது.


ஆக இத்தகைய தவறுகளை நீக்குவதில் நம்முடைய 'உள்ளிலிருந்து செயற்படும சக்தி' பயனற்றுப் போவதால் 'வெளியிலிருந்து செயல்படும் சக்தி' யொன்றை நாம் நாட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

அதுவே 'கூட்டு இஹ்திஸாப்'


இறைபாதையில் முன்னேறிச் செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பலர் ஒன்றுகூடி தங்களுடைய அஃமால்களை சீர்திருத்தி முறைப்படுத்திக் கொள்வதையே நாம் 'கூட்டு இஹ்திஸாப் என்றழைக்கின்றோம்.


கீழ்வரும் இறைவசனம் இதை உறுதிப்படுத்துகிறது.


இறைநம்பிக்கையுள்ள ஆண்களும் பெண்களும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள்.
உற்ற தோழர்களாக இருப்பார்கள்;
உறுதுணையாகத் திகழ்வார்கள்;
நன்மையான செயல்களை (தங்களுக்கிடையிலும் பிறரிடத்திலும்) ஏவிக் கொள்வதிலும் தீமையான செயல்களை விட்டு (தங்களையும் பிறரையும்) காத்துத் தடுத்து நிறுத்துவதிலும் தொழுகையைநிலைநாட்டுவதிலும்இ ஜகாத்தை முறைப்படி கொடுத்து வருவதிலும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முழுமையாகக் கட்டுப்பட்டு வாழ்வதிலும் இவர்கள் தங்களுக்கிடையில் உதவியாளர்களாக விளங்கி வருவார்கள்.


தங்களுக்கிடையில் தவறுகளை சுட்டிக்காட்டி தவிர்த்துக்கொள்ளச் செய்வதிலும் முன்னேற்றப் பாதையில் வளர்ச்சிப் படிகளை மென்மேலும் அடைய இன்னும் என்னென்ன அமல்களை செய்ய வேண்டும்?

என்னென்ன அமல்களை அதிகரிக்க வேண்டும்?

என்னென்ன அமல்களை அழகாக்க வேண்டும்? என்பதனையெல்லாம் தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்கிறார்கள்.

இப்பண்பினைத் தான் கண்ணாடியின் பண்போடு உருவகப்படுத்திக் கூறியுள்ளார்கள் அண்ணல் எம்பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள்.


'ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கண்ணாடியைப் போன்றவன் ஆவான்!' (புலூகுல் மராம்)


கண்ணாடி நம்மை - தன்முன் நிற்பவரை - அப்படியே பிரதிபலிக்கின்றது.

உங்களுடைய முகத்தில் அழுக்கோஇ அடுப்புக்கரியோ ஒட்டியிருந்தால் அதை அப்படியே வெளிப்படுத்தும்.

உங்கள் முகப்பூச்சு அதிகமாகிப் போனால் அதையும் சுட்டிக்காட்டும்.

கண்ணாடியில் தெரிவது நம்முடைய அச்சு அசலான பிம்பம்!

நாம் கண்ணாடியில் நம்முடைய குறைகளைக் கண்டு நம்மை அழகுபடுத்திக் கொள்கின்றோம்.


அவ்வாறே ஒரு முஃமினை இன்னொரு முஃமினை அப்படியே பிரதிபலிக்கின்றன.

அவனுடைய குறைகளைச் சுட்டிக்காட்டி மேலும் அவனை அழகுபடுத்துவதில் முனைகிறான்.

அவ்வாறே தன்னுடைய குற்றங்குறைகளை அவனிடமிருந்து அறிந்து கொண்டு தன்னையும் அழகாக்கி அழகானவான ஆக்கிக் கொள்கின்றான்.


கூட்டு இஹ்திஸாப் முறையில் இதைத்தான் நாம் கையாள்கிறோம்.

அங்கு அமர்ந்திருந்திருப்போரில் ஒவ்வொருவரும் தானாக முன்வந்து தன்னைப்பற்றிய தன்னுடைய அமல்களைப் பற்றிய சுயவிமர்சனத்தை முன்வைப்பர்.

பிறகு அதன் மீதான ஆய்வும்இ சுட்டிக் காட்டலும்இ சீர்படுத்துதலும் நடைபெறுகின்றது.

கீழ்வரும் விஷயங்களின் கீழ் சுய விமர்சனம் செய்யபடுகின்றது.


(இங்கே முன்னேற்றபப பாதையில் உங்களுடைய நிலைக்குத் தக்கவாறு விமர்சனமும் மாறுபடும.

ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஜமாஅத் தொழுகையை மட்டுமே குறிப்பிடுவர்.

அடுத்த நிலையில் உள்ளோர் சுனன் நவாஃபில் தொழுகைகளையும் குறிப்பிடுவர்.

அதனையடுத்து உள்ளோர் இரவுத் தொழுகையையும் குறிப்பிடுவர்.

இவ்வாறே ஒவ்வொரு இபாதா-விலும் அவரவர் நிலைக்கேற்றாற்போன்று விமர்சனம் மாறுபடும்)


அதனையடுதது தினசரி தொடர் குர்ஆன் ஓதுவது;

ஹதீஸ் ஆய்வு செய்வது மற்ற இஸ்லாமிய நூற்களை வாசிப்பது என்பன பற்றி கூறுவர்.


2. பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் மனைவி ஏனைய உறவினர்களோடு தன்னுடைய தொடர்பும்இ போக்குவரத்தும் எந்த அளவு உள்ளது?

அண்டை அயலார்கள்இ நண்பர்களோடு எந்த அளவு தொடர்பும் உறவும் உள்ளது? என்பதைப் பற்றிக் கூறுவர்.


இவ்விதம் ஒருவர் தன்னைப் பற்றிய முழுமையான சுய விமர்சனத்தை வைத்த பின்பு அதனைப் பற்றி யாருக்கும் ஏதேனும் ஐயங்கள் இருந்தாலோ தெளிவு பெற வேண்டிய இருந்தாரோ அதனை விரிவாக்க கேட்டுக் கொள்வர்.

அவருடைய நடத்தைகளில் ஏதேனும் குறைகள்முறைகேடுகள் தென்பட்டு சீர்திருத்த வேண்டி இருந்தால் அவற்றையும் சரிப்படுத்துவர்.


இதுவே கூட்டு இஹ்திஸாப்பின் நடைமுறை!


அண்ணலெம் பெருமானார் சல்லல்லாஹி அலைஹி வசல்லிம் அவர்கள் கூறியுள்ளதாவது
'

ஒரு முஃமின் இன்னொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவன் ஆவான். அதன் ஒரு பகுதி இன்னொரு பகுதிக்கு (முட்டுக்கொடுத்து) வலிமைப்படுத்துகின்றது' -

பிறகு அண்ணலார் தம்முடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.


குறைகளை மறைத்தும்இ குறைத்தும் நிறைகளை வளர்த்தும்இ உயர்த்தியும் ஒருவருக்கொருவர் செயல்பட்டால்தான் உறுதுணையாகஇ வலிமைப்படுத்துபவர்களாகத் திகழ முடியும்.

அதற்கு 'கூட்டு இஹ்திஸாப் முறை சிறப்பான முறையில் பயன்படுகிறது.
நாம் சாலிஹீன்களாக சான்றோர்களாக மாறவேண்டும் என்பதற்காகத் தான் இது போன்ற நடைமுறைகள் முன்வைக்கப்படுகின்றன.

ஆகையால் தன்னைப் பற்றித் தானே விமர்சிக்கலாமா?

தன் அமல்களை தானே வெளிப்படுத்தலாமா?

பிறருடைய குறைகளை இது துருவிஆராய்வது போல் அமையாதா?...........

இன்னும் இவை போன்ற கேள்விகள் எழுவதெல்லாம் வாய்ப்பே இல்லை.

பெண் விடுதலை ஒருபார்வை

பெண்கள்சுதந்திரத்தைநாடி இயக்கங்களாக போரிடும் இவ்வேளையில் பெண்கள் சுதந்திரம் பற்றி வாய்கிழியப் பேசிய ஷஇஸங்கள்யில் யாவும் புறமுதுகிட்டு விட்ட இவ்வேளையில் இஸ்லாம் வழங்கும் பெண்கள் சுதந்திரம் பற்றி நாம் ஒரு ஆய்வுக் கண்ணோட்டம் நிகழ்த்த கடமைப் பட்டுள்ளோம்.

ஒரு மனிதன் தன்னுடைய இயற்கை நியதிக்கேற்ப இறைவன் தனக்கு வழங்கியுள்ள உரிமைகளை சரிவரப் பயன்படுத்தலும், அவற்றில் வேறொருவரின் எந்த வித தலையீடும் இல்லாமல் இருத்தலுமே ஷசுதந்திரம் ஆகும்.

இத்தகைய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது இக்காலத்திய பெண்ணியம் தன்னுடைய சுதந்திரத்தை உரிமைகளை பெறுவதை விட்டும் வெகுதூரம் விலகியும் விலக்கப்பட்டும் உள்ளது தெளிவாகப்புரியும்.

இன்றைய பெண்ணியம் சிறைப்பட்டுள்ள அடிமைத்தனத்தை நாம் இருவகையாகப் பிரிக்கலாம்.

1. உரிமை ரீதியிலான அடிமைத்தனம்.

2. சிந்தனை ரீதியிலான அடிமைத்தனம்.

1.உரிமை ரீதியிலான அடிமைத்தனம்

உரிமை ரீதியிலான அடிமைத்தனமானது பெண்களை அவர்களுக்கு இயல்பாக தரப்பட வேண்டிய பிரதிநிதித்துவத்தைத் தராமலிருத்தலும், ஒரு ஆணாதிக்க மேலாண்மையை சமுதாயத்தில் நிலவச் செய்து அதன் கொத்தடிமை நிலையில் பெண்ணினத்தை வைத்திருப்பதும் ஆகும்.

காலங்காலமாய் பெண்ணினம் இந்த உரிமை ரீதியிலான அடிமைத்தனத்தின் கீழ் அவதிப்பட்டுக் கொண்டு வருவதோடு மட்டுமல்லாது இன்றைய பல்வேறு தரப்பட்ட ஷபெண் இயக்கங்கள் அதற்காகப் போரிட்டுக் கொண்டுள்ள போக்கே அதன் அடிமைத்தள வேர்கள் சமுதாயத்தில் எந்தளவு ஆழமாக வேறூன்றியுள்ளன என்பதை நமக்குக் காட்டுகின்றது.

பழைய காலத்திய பெண் அடிமைத்தன இயல்புகளை நாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நடைமுறை யுகத்திய விஞ்ஞான நூற்றாண்டு என்றழைக்கப்படும் அதிவேக அறிவியல் வளர்ச்சியைத் தன்னகத்தே கொண்டே நிகழ்காலத்துப் போக்கை கருத்தில் கொண்டாலும் கூட நடைமுறை நமக்குக் கொஞ்சமேனும் திருப்தி தருவதாய் இல்லை.

யாழ் இனிது குழல் இனிது என்பார் மழலை சொல் கேளாதார் என்கிறார் வள்ளுவர்.

ஆனால் பெண்ணின் அடிமைத்தனமானது அதன் மழலைப்பருவத்திலேயே கொடூரமாய்க் கொன்றொழிப்பது வரைஇட்டுச் சென்றுள்ளது.

எனவேதான் பெண் குழந்தைகள் மீதான வெறுப்பை விருப்பாக மாற்றும் விதத்தில் ஏதேனும் ஆண்டை ஷபெண் குழந்தைகள் ஆண்டாக அறிவிப்பது போன்ற செயல்களை சார்க் போன்ற உலகு தழுவிய அமைப்புகள் செய்கின்றன.

ஓராண்டின் ஒதுக்குதல் மற்றும் அறிவிப்பு மற்றும் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் சாதிக்கப் போவதில்லை.

இன்று கூட தமிழகத்தின் உட்பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்குப் பின்னால் கொல்லைப்புறம், சுவரை ஒட்டிய சந்துகளிலும் பெண் சிசுக்கள் புதைக்கப்பட்ட சிறுமணல் மேடுகளும், நாய் தோண்டி இழுத்துப் போய் விடமாலிருக்க இலந்தை முள் போட்டு பெரிய கல்லைத் தூக்கி வைத்த சவக்குழிகளும் புதியன புதியனவாக நமக்குக் காட்சியளித்துக் கொண்டுள்ளன.

பிறக்கும் குழந்தை ஆணா பெண்ணா எனத் தெரிந்து கருவிலேயே தெரிந்து கொண்டு பெண் என்றால் கருவிலேயே அழித்து விடத்தான் இன்று விஞ்ஞானம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இப்படியாக ஒவ்வொரு வருடமும் உலகில் ஒன்றல்ல, இரண்டல்ல, இலட்சக்கணக்கான பெண் கருக்கள் கொல்லப்பட்டு வருகின்றன.

இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம் காலங்காலமாய் பெண் மீது ஏவப்படும் சமூகக் கொடுமைகளும், பெண்ணினம் பற்றிய தவறான கருத்தோட்டங்களும் தான்.

கர்ப்பப்பையிலிருந்து வெளிவர அனுமதிக்கப்பட்டு விட்டால், பெண் குழந்தை என்றால் போதிய தாய்ப்பால் தரப்படுவதில்லை.

ஆண் குழந்தைகளுக்கே நீண்ட நாள் தாய்ப்பால் தரப்படுகின்றது.

பால், முட்டை போன்ற சத்துள்ள உணவுப் பொருட்களும் ஆண் குழந்தைகளுக்கே தரப்படுகின்றன.

ஒருபெண் குழந்தைக்குக் கொடுக்கப்பட வேண்டிய சத்துணவில் மூன்றில் இரண்டு பங்கு கூட அவளுக்குக் கிடைப்பதில்லை.

உணவில் ஆரம்பிக்கும் இந்த விஷம், அவளுடைய ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் ஊட்டப்படுகின்றது.

சத்துணவின்மை, போதிய அளவு கவனிப்பின்மை, இதனால் உடல் நலக்குறைவு, உடல் நோயுறுகின்ற போது கூட ஆணுக்கு தனி கவனிப்பு, பெண் குழந்தைகள் மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதே இல்லை.

புதுடெல்லி போன்ற பண்பாட்டு வளர்ச்சி அடைந்த தலைநகரங்களிலேயே ஒரே நோயால் ஒரே மாதிரி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஆண் குழந்தைகளில் 1000 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படுகிறார்கள் எனில், பெண் குழந்தைகள் 600 பேர் மட்டுமே சிகிச்சைக்காகக் கொண்டு வரப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஓராண்டில் சுமார் ஒரு இலட்சம் பெண் குழந்தைகள் பிறக்கின்றனர். எனில்

அவர்களில் 15 ஆயிரம் குழந்தைகள் ஒரு வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே மரணத்தின் மடியில் வீழ்ந்து விடுகிறார்கள்.

5 வயது நிறைவடைவதற்குள் மேலும் 35,000 பெண் குழந்தைகள் போதிய மருத்துவ வசதி இல்லாததால் இறக்கிறார்கள்.

மருத்துவ, உணவு வசதியையே தராதோர் கல்வியை மட்டும் தந்துவிடவா செய்வார்கள்?

மொத்தப்பெண் குழந்தைகளில் இருபத்;தைந்து சதவிகிதத்தினரே கல்வி பெறுகின்றன.

அதேசமயம், ஆண் குழந்தைகளில் ஐம்பது சதவிகிதம் பேர் கல்வி பெறுகின்றன.

கிராமப் புறங்களிலோ நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

கிராமப் புறங்களில் வாழும் பெண் குழந்தைகளில் பத்து அல்லது பதினைந்து சதவிகிதத்தினரே பள்ளிக் கூடங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

ஒருசில கிராமங்களில் பெண்களை வேலைக்கு அனுப்பி, கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு ஆண் குழந்தைகளைப் படிக்கவைக்கும் கொடிய நிலைமையையும் காணப்படுகின்றது.

இஸ்லாமிய அடிப்படைகளினுள் தலையானது நம்பிக்கை.

உலகில் நம்பிக்கை இஸ்லாத்தில் காணப்படும் அளவு அதிக அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எங்கும் காணப்படாது.

இறைநம்பிக்கை மற்றும் மறுவாழ்வு (மறுமை) நம்பிக்கையைக் கொண்டே இஸ்லாமியச் சட்டங்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன.

இந்த ரீதியில் தான் இஸ்லாம் ஒவ்வொரு பிரச்சனையையும் அணுகுகின்றது.

இந்த உலகில் அணு அளவே ஒருவர் நன்மை செய்திருந்தாலும் அதற்குரிய நற்கூலியை அவர் கண்டு கொள்வார்.

இந்த உலகில் ஒருவர் அணு அளவு தீமை செய்திருந்தாலும் அதற்குரிய தண்டனையை அவர் பெற்றுக் கொள்வார். (அல்குர்ஆன் 99:7-8) என்று இஸ்லாம் கூறுகின்றது.

அந்த மறுமையில் (அங்கே) ஒவ்வொரு பெண் குழந்தையும் கொண்டு வரப்பட்டு அவர்கள் ஏன் கொலை செய்ப்பட்டார்கள் என்று வினவப்படுவார்கள். (அல்குர்ஆன் 81:8-9)

இவ்வாறு வாழும் உரிமையை வழங்கிய இஸ்லாம் வரதட்சணையை ஒழித்து பெண்ணிற்கு ஷமஹர் (திருமணக்கொடை) வழங்கினால் தான் திருமணம் நடைப்பெறும் என்று கூறுவதன் மூலம் வரதட்சணைக்குப் பயந்து ஏழைப் பெண் சிறுபிராயத்தில் இழிவுக்கு ஆளாக்கப்பட்டு தன்னம்பிக்கை இழந்து போவதையும் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு ஒரு தனியிடத்தினை சமூகத்தில் பெற்றுத் தந்துள்ளது.

இந்நூற்றாண்டில் பல்வேறு கொள்கைகள் பெருகிவிட்ட வேளையிலும் கூட இன்னும் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதானது இஸ்லாம் ஓர் இறைமார்க்கம், அதில்தான் எல்லா பிரச்சனைகளுக்குரிய சரியான தீர்ப்புகள் உள்ளன என்பதை நிரூபிக்கின்றன.

ஏனென்றால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு உயிர் வாழும் உரிமையை மட்டுமல்லாது அவர்களுக்கு சமூக அந்தஸ்தையும், கௌரவத்தையும் பெற்றுத் தந்தது.

2. சிந்தனை ரீதியிலான அடிமைத்தனம்

தன் ஆளுமைக்குட்படுத்திய காலனி நாடுகளிலும் தன் குடியேற்ற நாடுகளிலும் மேற்கத்திய கலாச்சாரம் மற்றும் நாகரீகம் மிகப்பெரும் அளவில் வேரூன்றியுள்ளது.

ஒரு புறத்தில் அதன் சொந்த நாடுகளிலேயே அதன்மீதான விமர்சனங்கள் அதிகரித்து வந்தாலும் கூட வளர்நாடுகள் மற்றும் கீழை, கிழக்காசிய நாடுகளிலும் ஆப்பிரிக்க நாடுகளிலும் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது..

மேற்கத்திய கலாச்சாரத்தின் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு வெற்றி உண்டென்றால் அது சிந்தனையில் தன் சுவடுகளைப் பதித்து செயல் ரீதியில் வெளிப்படுத்த வைப்பதாகும்.

ஆம் மூளைச்சலவை செய்து மேற்கத்திய கலாச்சாரமே மாண்பளிக்கும் கலாச்சாரம் எனும் எண்ணத்தை அது அதன் பின்பற்றுவோரிடையில் தோற்றுவித்துள்ளது.

உரிமை ரீதியில் அடிமைப்பட்டவர்களுக்கு தாம் தமது உரிமைகளை என்றாவது மீட்டு அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணக் கிளர்ச்சியாவது இருக்கும்.

ஆனால் சிந்தனை அடிமைப்பட்டவர்களுக்கு தாம் அடிமைப்பட்டுள்ளோம் என்கிற உணர்வு கூட இருக்காது.

மாறாக தாம் கொண்ட கொள்கைகள் தலை சிறந்தவை என்று எண்ணி அவர்கள் அதனை வளர்ப்பதில் துணை சென்று கொண்டிருப்பார்கள்.

இந்தியப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அவசியமற்ற கட்டுக்கோப்புகளில் ஏற்கனவே சிக்குண்டு வீழ்ந்துவிட்ட இந்தியப் பெண்ணினத்தை மேற்கண்ட சிந்தனை அடிமைத்தனம் மேலும் மேலும் தாழ்மைப்படுத்தியது.

அவர்களை ஆபாசப் பொருள்களாக்கி காட்சிக்கு வைப்பதில் பேருதவி புரிந்தது.

ஏற்கனவே இந்தியப் பண்பாடு, கலையும் ஒரு மாதிரியான அடிமைத்தனத்தை வளர்ந்து வந்துள்ளன.

இதில் ஆட்சியாளர்களின் பங்கும் ஆதிக்கஜாதிகளின் பங்கும் மகத்தான அளவில் உள்ளது.

ஒருபெண் வளரும்போது ஷகல்லானாலும் கணவன்ளூ புல்லானாலும் புருஷன் போன்ற கருத்துக்களை வளர்ப்பதன் மூலம் அவள் மனதில் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி விடுவதிலும் நடனங்கள் மற்றும் கலைகளின் பெயரால் பெண்ணை ஆபாசப் பொருளாக்கி நடனமென்று உடல் அங்க அசைவுகளைக் கூத்தாக்கி பலரும் பார்த்து மகிழும் வண்ணம் அவளை நடுச்சந்திப் பொருளாக்கியதை அறிவோம்.

இதைவிட ஒருபடி மேலேபோய் மேற்கத்திய நாகரீகம் பெண்ணுக்கு அநீதி இழைத்தது.

சமஉரிமை தருகிறோம் என்கிற பெயரில், சரிபாதிக் கோட்பாட்டை திணித்து இயற்கை அமைப்புக்கு விரோதமாய்ப் பெண்ணைப் பயன்படுத்த முன்வந்தது.

கட்டற்ற சுதந்திரத்தை வழங்கி கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையைத் தோற்றுவித்தது.

உடை, உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் அது இடம் பெற்றது தான் அதன் தனித்தன்மையாகும்.

ஆம்! அதன் பிடியில் தான் அடிமைப்பட்டு இறைவன் தனக்கு வழங்கியுள்ள இயற்கை நியதிகளை ஷபுரியாத கட்டற்ற சுதந்திரத்தின் பேரால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கொணடிருப்பதை அறியாத பெண்ணினம் மாறாக தானாக அவற்றைக் கேட்டு பெறும் நிலைமைக்கு ஆளானது.

எந்த அழகலங்காரத்தை கொண்ட கணவன் மட்டும் காண வேண்டுமோ அதனைப் பெண்ணினம் காட்சிப் பொருளாக்கி அனைவர் பார்வையிலும் வைத்தது.

எந்தவொரு தாம்பத்ய இன்பத்தை பெருங்குறிக்கோளாக எண்ணி திருமணங்கள் நடைபெறுகின்றனவோ அது திருமணமாகும் முன்பே வெகு மலிவாகக் கிடைக்க வழிவகுத்தது.

இன்னும் பருவமே அடையாத பாலகர்களுக்கு இக்கலாச்சாரம் மீசை முளைக்க வைத்தது.

இதன் விளைவாக மேலை நாடுகளில் அவர்கள் பயப்படும் அளவிற்கு ஒழுக்கச் சீர்கேடுகள் விரைவாகப் பரவின.

கற்பழிப்புகள் அதிகமாயின.

அதைவிட அதிகம் போய் இன்று குடும்ப வாழ்வு சீரழிந்து சமூகமே ஸ்தம்பித்து நிற்கின்றது.

அனாதை இல்லங்கள் பெருகிவிட்டன.

ஆண், பெண் கவர்;ச்சி குறைந்து ஓரினப் புணர்வுமுறை அதிகமானது.

முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன.

ஆயினும் கூட இன்னும் நம் இந்தியா போன்ற கீழை நாடுகளில் மேற்கத்திய கலாச்சாரத்தை நாகரீகமானது என்று இளைஞர்கள், குறிப்பாக யுவதிகள் பின்தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, எத்தகையோ சீர்திருத்தவாதிகள், எத்தனையோ இயக்கங்கள், போராட்டங்கள் ஷபெண் விடுதலைக்காகப் போரிட்ட போதிலும் அவர்களால் அதனைப் பெற்றுத்தர இயலவில்லை.

ஏனெனில் பெண்ணின் இயற்கைக்கேற்ப புனையப்பட்ட ஒரு சமச்சீரான கொள்கையை அவர்களால் உருவாக்க இயலவில்லை.

இன்று அத்தகையதொரு மகோன்னதமான கொள்கை இஸ்லாமில் மட்டும் உள்ளது. ஏனெனில் அதுதான் இறைமார்க்கம்.

Tuesday, July 29, 2008

இறைவனுக்காக இழப்போம் கொஞ்சம்!

மதீனாவெங்கும் ஒரே விழாக்கோலம்.

இறைத்தூதர் வரப்போகிறார்கள் அல்லவா?

தலஅல் பத்ரு அலைனா

ளூமின் ஸனிய்யதில் வதாஇ

வ ஜபஷ் ஷூக்ரு அலைனா

மா தஆ லில்லாஹி தாஇ

என்று சிறுமிகள் எல்லாம் பாடிக் கொண்டுள்ளார்கள்.

உக்பா இப்னு ஆமிர் இதைப் பற்றி எதனையும் தெரிந்துகொள்ளாமல் அவர் பாட்டுக்கு மலைச் சாரலில் தன்னுடைய ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

தங்களுடைய ஊருக்கு அல்லாஹ்வின் தூதர் வந்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் உடனே மதீனாவுக்கு ஓடோடி வந்தார்.

இறைவனின் தூதரிடம் பைஅத் செய்துகொண்டார்.

ஆனாலும் அவரால் அல்லாஹ்வின் தூதருக்குப் பக்கத்திலேயே இருக்கமுடியவில்லை.

என்ன செய்வது?

வாழவேண்டுமென்றால் சம்பாதிக்க வேண்டும்!

அவரிடம் இருக்கும் கொஞ்சம் ஆடுகளை மலைப் பள்ளத்தாக்குகளில் சென்று மேய்த்தால் தான் சாப்;பாட்டுக்கே வழிபிறக்கும்.

சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது இஸ்லாமைப் பற்றி சிந்திக்க முடியுமா?

வேறுவழி இல்லாததால் அவர் இரண்டுநாட்களில் ஆடு மேய்க்கக் கிளம்பிவிட்டார்.

அங்கே அவர் மாதிரியே பன்னிரண்டு பேர் ஆடுமேய்த்துக் கொண்டு இருந்தார்கள்.

அனைவருக்குமே ஒரே கவலையாக இருந்தது;

கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள்

தினந்தோறும் ஓர் ஆள் மதீனாவுக்குப் போவது

ளூஅல்லாஹ்வின் தூhருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து அவர் சொல்லதை எல்லாம் கேட்டுக்கொள்வது

ளூ அதை மாலையில் தோழர்களிடம் வந்து கூறிவிடுவது.

இதுதான் அவர்களுடைய திட்டம்!

இந்தத்திட்டத்தில் உக்பாவும் உடன்பாடில்லை.

தன்னுடைய ஆடுகளை நண்பர்களிடம் விட்டுவிட்டுப்போக அவர் மனது இடம் தரவில்லை.

ஷஷநீங்கள் வேண்டுமானால் உங்களுடைய ஆடுகளை என்னிடம் விட்டுச் செல்லுங்கள்!

நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஆனால் நான் போக மாட்டேன்!

என்று கூறிவிட்டார்.

இப்படி தினமும் ஒரு சகோதர் மதீனா போவார்.

அல்லாஹ்வின் தூதர் கூறுவதையெல்லாம் கேட்டுக் கெண்டுவருவார்.

உக்பா மட்டும் போகவே மாட்டார்.

மலையிலேயே உட்கார்ந்திருப்பார்.

ஒருநாள் தனியாக தன்னுடைய ஆடுகளை உக்பா மேய்த்துக் கொண்டு இருந்தார்.

தன்னுடைய மனதைப் பார்த்து கேள்வி கேட்டார்:

ஷஷஏன் நீ மட்டும் இஸ்லாமைக் கற்றுக் கொள்ள போகவே மாட்டேன் என்கிறாய்?

ஷஷஇப்படியே ஆடுகளை மேய்த்து சம்பாதிப்பதிலேயே வாழ்க்கையை ஓட்டிவிட்டால்

நாளை மறுமையில் என்ன செய்வாய்?

ஷஷஅங்கே உன்னை யார் காப்பாற்றுவார்கள்?

உன்னுடைய இந்த ஆடுகளா?

இல்லை நீ சம்பாதிக்கும் பணமா? அ

வருக்கு மிகவும் பயமாக இருந்தது.

அப்போதே அவர் தீர்மானித்துவிட்டார்.

ஷஷநான் அல்லாஹ்வின் தூதரைச் சந்திப்பேன்ளூ

அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்து இஸ்லாமைப் படித்துக் கொள்வேன்.

அல்லாஹ்வின் அன்பைச் சம்பாதிக்க முயற்சி பண்ணுவேன்!

இன்ஷா அல்லாஹ்!

மதீனாவுக்குச் செல்லும் பாதையில் அவர் நடந்து வந்து கொண்டிருக்கும் போது பின்னால் நடக்கப் போவது அவருக்கு எதுவும் தெரியாது.

ஒரு மிகப்பெரிய இஸ்லாமிய அறிஞராக தாம் மாற போகிறோம்!

குர்ஆனை ஓதும் காரியாக மாறப் போகிறோம்!

மிகப் பெரிய இஸ்லாமிய வெற்றி வீரராக மாறப் போகிறோம்!

உலக்தின் மிகப்பெரிய பண்பாட்டுச் சிகரமான டமாஸ்கஸ் நகரையே தாம் வெற்றிக் கொள்ளப் போகிறோம்!

வரலாற்றில் என்றென்றும் இடம் பிடிக்கப் போகிறோம்!

எதுவுமே அவருக்குத் தெரியாது.

இஸ்லாமை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் அவர் மதீனா நகரை நோக்கி போய் கொண்டிருந்தார்.

தனக்காக தியாகம் செய்து வரும் உக்பாவை அல்லாஹ் கைவிட்டு விடவில்லை.

அவர் பெயரை பொன் எழுத்துகளால் எழுதினான் வரலாற்றில்!!

அல்ஹம்துலில்லாஹ்!

ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும்.

சொர்க்கம் வேண்டுமென்றால்

அல்லாஹ்வின் அன்பு வேண்டுமென்றால்

நாமும் கொஞ்சம் இழக்க வெண்டும்!

THE OBLIGATION OF IQAAMAT-UL-DEEN


Moulana Sadruddin Islahi RAH

Chapter 1: THE MUSLIM UMMAH AND THE PURPOSE OF ITS EXISTENCE
The Noble Position of the Ummah
When the ummah was brought into existence, its Creator stated about it:
كُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ
You are the best nation raised up for mankind. (Al-Imran 110)
This address is comprised of two parts:
1. The Muslim nation will be the best among nations, unlike any other nation or group or party in the characteristics of thought and action.
2. This group, the Muslim ummah, has not arisen in the theater of life to live routinely like the other nations and groups but has been brought forth with a special significance and with a very specific objective. There is a fundamental difference between it and the other groups in the world. It is not merely one of them but distinct and exalted from them and has been created and specifically sent for a specific need of theirs. And now it is forever appointed for their service (raised for mankind). Accordingly, in the statements of the Holy Prophet also in clear words this ummah is designated as “mab`ooth” (sent or appointed). For instance:
Verily you have been sent as facilitators and not as creators of difficulty. (Bukhari, vol 2)
From the statements of Allah and His Messenger, it becomes apparent that all the nations and peoples of the world are on one platform while the Muslim ummah is on another. It is the possessor of a distinct character and the carrier of a exalted position. Since its position and character is separate and exalted from the other nations, then it necessarily follows that in its manner of thought, its way of action, its interests, its values, the standards of its likes and dislikes, its nature and its goal and vision- in short- in each and every aspect, it enjoys a separate and distinct position. And no single aspect of this ummah can ever be comparable to any other nation or group.

The Purpose of Existence: Iqaamat-ul-Deen
Thus far, this much is clear that the existence of this ummah has a specific and exalted purpose. Now the question remains as to what that specific and exalted purpose is. The Holy Quran, immediately following the previously mentioned words, answers this very question:
تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَتُؤْمِنُونَ بِاللّهِ
You enjoin the good, forbid the wrong and believe in Allah. (Al-Imran 110)
In other words, that specific mission for which this Muslim nation has been raised is to stop humanity from wrong thoughts and wrong actions and bring them to the correct way. To describe this particular work or purpose, Allah has selected two more expressions. The first of these is Shahadat-e-Haqq (Witnesses unto mankind). Accordingly, its command is:
وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُواْ شُهَدَاء عَلَى النَّاسِ
And thus we have made you the Balanced Nation so that you may be witnesses unto mankind. (Baqarah 143)
There is also a verse of similar words and meaning in Surah Hajj, and although it has not been fully clarified in any of these verses as to what it is that the ummah has been appointed to bear witness to, the reason for this is only that it is self-evident. What could it be, for which it has been made responsible to bear witness to the people of the world, other than that which it has been given from Allah? The proof for this also lies in the very words following the verses mentioned above:
وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا
And the Messenger to bear witness over you. (Baqarah 143)
Think about what it is that the Messenger of Allah (Ë) has been sent to bear witness to in front of the people of faith? If that thing could only be the true religion which was being revealed unto him (Ë), and there cannot be two opinions of this- as is the case, then there also cannot be two interpretations of the fact that what this Balanced Nation has been established to bear witness to, is this true way of life, which you can call deen-ul-haqq or just simply haqq (truth).
The second interpretation is Iqamat-ul-din.
Abdullah b. Mas‘ud, explaining the status and rank of the Noble Companions, states:
Allah has selected them for their closeness to the Prophet and their establishment of his deen. (Mishkat)
This hadith also proves this point that the goal of this ummah’s existence is the establishment of Allah’s deen.
On the basis of these three statements from the Quran and Hadith, you can choose whichever expression you wish for the purpose of existence of the Muslim ummah: Amr bil Ma‘roof, Shahadat-ul-Haqq, or Iqamat-ul-Din. Because these are three interpretations of the same intent, and whichever you use, the meaning and intent are one.
However, despite the similarity of the meaning and intent, if you examine these three interpretations in depth and compare them in every aspect, you will find that the comprehensiveness, depth and clarity of the last expression (iqamat-ul-din) is not present in the others.
It has depth because the word iqamah (establishment) has been used, and this word, as will become clear soon, presents the whole picture. It is comprehensive because the concerned verse does not merely mention what the obligation of life of the Muslim is, but also makes clear that this same obligation was for all the prophets and their people. In other words, the concept is that believing in Allah and accepting the covenant of his worship means that his deen be established. It is clear because that thing which the people of faith must establish is explicitly present in the concerned verse and has been mentioned by name as al-deen (the way of life revealed by Allah).
On the basis of these features, the interpretation Iqamat-ul-deen has the right to be the predominant terminology, and the use of this term is more appropriate to make apparent the purpose of existence of the Muslim ummah.

The Meaning of Iqamat-ul-Deen
The term iqamat-ul-deen is comprised of two words: iqamat and deen. To understand the concept necessitates that you first understand the individual words.
When the word iqamah is used with a material, tangible object it implies straightening it. For example, the Quran says:
فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنقَضَّ فَأَقَامَهُ
They found there a wall on the point of falling down, but he set it up straight (fa aqaamahu). (Kahf 77)
And when the word is used with abstract things, the word means to grant them their full and proper rights. In other words, the concerned work be completed in the best possible way, with complete attention and utmost diligence. The Imam of Lugha (Arabic Language) Allamah Raqhib Isfahani states:
To establish a thing means to fulfill its due rights in the best possible way, as Allah says: “O People of the Book, you are on nothing until you establish the Torah and Injeel (tuqeemul-Tawrat wal-Injeel).” (Mufradat)
This concept can be understood with the example of the Quranic commandment to establish prayer (iqamat-ul-salaah). The iqaamah (establishment) of Salaah, according to the spirit of this definition, would thus mean that it be performed with all of its external etiquettes and conditions and all its inner (spiritual) qualities. That way the purpose of salat can be achieved in both letter and spirit. Therefore the establishment of deen would mean that its followers fulfill the due right of accepting it in both intellectual and practical capacities.
The linguistic meaning of deen is obedience (itaa’ah). And technically it means that way of Allah’s obedience and that system of human life that has been given by Allah to his servants through the Prophet to act upon, the details of which are present in his book and in the Sunnah of His Messenger. An examination of these details leaves absolutely no doubt to the fact that there is no human problem and no branch of human life that falls outside of its domain. This deen extends from the intellect and understanding of the human being and the depths of his heart, to his houses of worship and the four boundaries of his home, to the circles of his relatives and his cultural institutions and to the last corner of all his collective and international problems, and imparts its continual guidance about every problem, every matter and every branch. It does not approve of any individual or private life for a human being in which he is free to do as he wills, and it is absolutely not prepared to accept the existence of any world for human life where it itself is not present. It considers the articles of faith, the creed, acts of worship, morality, piety and excellence all its branches. It does not leave alone even such matters as the etiquettes of the bathroom and matters of marital life. Even the application of criminal laws are part of deen:
وَلَا تَأْخُذْكُم بِهِمَا رَأْفَةٌ فِي دِينِ اللَّهِ
“Let not pity withhold you in their case, in a punishment (deen) prescribed by Allah.” (Noor: 2)
If you can understand the terms iqamah and deen, then the understanding of iqamat-ul-deen will become self obvious. If iqamah means to fulfill the due rights in both intellectual and practical capacities, and deen implies that complete obedience of Allah, from which not a single corner of human life is unrelated and whose demands end only when reaching the last limits of humanity’s matters, then the concept of iqaamat-ul-deen necessarily is- and it can only be such- that the believers in the deen are fully cognizant of it, its fundamental concepts, its principles, its commands and its guidance; and that they be aware of its goal and aim, what position it gives them in this life, what ultimate end it designates for their existence, what ways of struggle and effort it advises for the attainment of that end, which things it commands and what it prohibits, what manner it advises its followers to adopt in the various departments of human life; in short, in the individual and collective capacity, how it demands one to live on this earth and what it demands one to do and be. The term necessitates that they be aware of all this and mold their practical lives according to this awareness, and that they practice every guidance of the Quran and Sunnah, implement every commandment of the shariah, and that the foundation of the national life be based on the principles of this deen and only this deen. In every matter only that viewpoint be adopted that this deen teaches. And that color be cast over society that it wishes. So much so that an onlooker can see a Quranic environment and a society that is a living Quran. Just as when an extremely tall structure is stood up and everyone can see with one look what it is and how it is, likewise this entire deen be so dominant over and established in human life that it can be seen and recognized from afar.

Amazing Nature Photos

BBC News

About Me

Syed
Coimbatore, Tamil Nadu, India
நான் சையத் அப்துர் ரஹ்மான். கோமுத்தூரில் வசிக்கிறேன். உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாமி்ல் ஆலிமிய்யத் பட்டம் பெற்றுள்ளேன். மாணவர் இஸ்லாமிய இயக்கத்தில் முன்பு இணைந்து பணியாற்றியுள்ளேன். இஸ்லாம் குறித்து பல நூற்களை எழுதியுள்ளேன். பல நூற்களை மொழிபெய்த்துள்ளேன். இதுவரை ஏறக்குறைய 27 நூற்கள் வெளிவந்துள்ளன. இந்த வலைப்பதிவில் பதியப்படும் கட்டுரைகளை யாவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை இஸ்லாமுக்கு சொந்தமானவை!. abdrahmanumari@gmail.co syedumari@muslim.com
View my complete profile